×

தேனியில் நுங்கு விற்பனை ஜோரு

 

தேனி, மே 6: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் செல்லவே தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பெரும்பாலான ரோடுகள் காலியாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் தவிக்கின்றனர். கோடை வெயிலை தாக்கத்தில் இருந்து சூட்டை தணிக்க பொதுமக்கள் நுங்கு, இளநீர், கருப்புச் சாறு, ஜூஸ், தர்ப்பூசணி உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர்.

உடலுக்கு இதமான எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் பொதுமக்கள் இயற்கைப் பானங்களான, நுங்கு, இளநீரை பொதுமக்கள் விரும்பி குடிக்கின்றனர். தேனி நகரில் பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் தற்காலிக நுங்கு விற்பனை அதிகரித்துள்ளன. இதனை சாப்பிடுவது மட்டும் இல்லாமல் வீடுகளுக்கும் அதிக அளவு வாங்கி செல்கின்றனர்.

இதனால் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து நுங்கு வியாபாரி தெரிவித்ததாவது: நாங்கள் தினந்தோறும் பகுதியில் இருந்து நுங்கு விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். என்னைப் போன்று 50க்கும் மேற்பட்டவர்கள் நுங்கு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெயில் தாக்கத்தால், இப்போது அதிக அளவு நுங்கு விற்பனை ஆகிறது. கோடை காலம் முடியும் வரை நாங்கள் இங்கே விற்பனை செய்வோம். ஒரு நுங்கு கண் ரூ.10க்கு விற்பனை செய்கிறோம் என்றார்.

The post தேனியில் நுங்கு விற்பனை ஜோரு appeared first on Dinakaran.

Tags : Nungu ,Theni ,Joru ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் ேகாடை வெயிலை சமாளிக்க...